Monday 24 February 2014

வதக்கி அரைத்த  தக்காளி சட்னி :


தோசைக்கு தொட்டுகொள்ள பல சட்னிகள் உண்டு. அதில் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் தக்காளி சட்னிக்கு நிகர் தக்காளி சட்னியே.

தக்காளி சட்னியை பல வகைகளாக செய்யலாம்: 

1. வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி அரைக்கும் சட்னி.
2. வெங்காயம் மற்றும் தக்காளியை அரைத்தபின் தாளிகப்படும் சட்னி.
3. வெறும் தக்காளியை மட்டும் வதக்கி செய்யப்படும் தக்காளி தொக்கு.

இந்த தக்காளி சட்னி, நான் எனது அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. அம்மாவின் கைவண்ணத்தில் வந்த இந்த சட்னியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையானவைகள்:

சிறிய வெங்காயம் : 20
புளி : பாதி நெல்லிக்காய் அளவு 
நாட்டு தக்காளி பெரியது -3
வரமிளகாய் அல்லது வத்தல் - 6 அல்லது 7 - தேவைக்கு ஏற்றபடி
எண்ணெய் - 3 தேக்கரண்டி 


செய்யும் முறை :

1. அடுப்பில் வாணலியை  வைத்து,சிறிது எண்ணெய் ஊற்றி , வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் நன்கு வதைங்கி முடியும் தருவாயில், புலியை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின் தட்டில் மாற்றவும்.நன்கு ஆற விடவும்.


 2. அதே வாணலியில் (எண்ணெய் வேண்டாம்,ஏனென்றால் வெங்காயம் வதக்கிய எண்ணெயில் மிளகாயை வதக்கினால் போதுமானது)மிளகாயை 5 நிமிடம் வதைக்க வேண்டும்.

3. பின்பு தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.


4. வதக்கிய அனைத்தையும் சிறிது நேரம் ஆற விடவும்.

5. ஆறியபின் முதலில் தக்காளி,பாதி புலி மற்றும் வரமிளகாயை நன்கு மைய அரைக்க வேண்டும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

6. இபோது சுவை  பார்த்துக்கொள்ளவும்.புளிப்பு குறைவாக இருந்தால் மீதி உள்ள புலியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.


வெங்காயம் இறுதியில் தான் சேர்க்க வேண்டும் 
7. இறுதியில் வெங்காயத்தை போடு கர கர என்று அரைத்து கொள்ளவும்.

நல்ல சுவையான தக்காளி சட்னி தயார்!!! :-)

தோசை, இட்லியுடன் இந்த சட்னி நன்றாக இருக்கும் 

பின் குறிப்பு:

சிலருக்கு வெங்காயம் கர கரப்பாக சாப்பிட பிடிகாது.அவர்கள் வெங்காயம் போடவுடன் நன்கு மைய அரைத்து கொள்ளலாம்.